நான் கண்ட பாரதி…

நான் கண்ட பாரதி... Pencil sketch on paper - 20x20 cms

விட்டு விட்டால்  அறவே நாம் அச்சம்

அறிவால் எட்டி விடுவோம் உச்சம் ;

ஏன் அனுபவங்கள் விடவேண்டும் மிச்சம் ?

வாழும் நாட்களே இங்கு கொஞ்சம்.

.

“கிடைக்குமா நாளை எனக்கு அன்னம் ?”

இதி தேவையில்லா கவலை சன்னம் !

நாம் பிறந்ததின் உன்னத லட்சியம்

அறிந்து செயல் படுவதே ஒரு சத்தியம் !

.

வாழ்ந்தேன் எத்தனை நாட்கள் ?

கண்டேன் எத்தனை விழாக்கள் ?

சேர்த்தேன் எவ்வளவு சொத்துக்கள் ?

இவையா என்னை காட்டும் அடையாளங்கள் ??

.

இல்லவே ! என்னால் பூமிக்கு என்ன பயன் ?!

எனக்குள் வளர்த்தேன் எத்தனை திறன் ?!

வழக்கத்தை விடுத்து வாழ்ந்தேனா முரண் ?!

இவைகளாலே அர்த்தம் பெரும் என் ஜீவன் !

.

உயர்த்திக் கொண்டால் விஸ்தார எண்ணம்

வாய்ப்புகள் வாய்க்குமே வானவில் வண்ணம் !

புலரும் ஒவ்வொரு சின்னஞ்சிறு க்ஷணம்

ஆகிடுமே படைப்பின் அன்புச் சின்னம் !

.

இம்மண்ணில் வாழ்ந்த சுப்ரமணிய பாரதி

புதுமைக்கு அவரே புதுவை சாரதி !

இக்கவிதை மகாகவிக்கு சமர்ப்பணம்

நிஜமாகட்டும் அவர் கண்ட சுவப்பனம் !

.

~புனிதா


Advertisements

3 thoughts on “நான் கண்ட பாரதி…

  1. Loved the poem….Coming from FB to here i thought this was written by Bharathi himself….Good effort Punitha. I liked the section abt

    “இல்லவே ! என்னால் பூமிக்கு என்ன பயன் ?!

    எனக்குள் வளர்த்தேன் எத்தனை திறன் ?!

    வழக்கத்தை விடுத்தது வாழ்ந்தேனா முரண் ?!

    இவைகளால் அர்த்தம் பெரும் என் ஜீவன் !”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s